திட்டக்குழு விவகாரம்- முதல்வரான பின்னர் முதல் முறையாக இன்று ஓ.பி.எஸ். டெல்லி பயணம்!
சென்னை: திட்டக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது குறித்து நாளை டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திட்டக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது குறித்து, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளார். திட்டக்குழுவுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் புதிய அமைப்பில், ஆதார் திட்ட ஆணையத்தையும், நேரடி மானிய உதவி அளிக்கும் திட்டத்தையும் இணைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் பேரில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி புறப்பட்டுச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் தமிழக தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் மற்றும் தமிழக திட்டக்குழு அதிகாரிகளும் செல்வர் எனத் தெரிகிறது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து, தமிழக கோரிக்கைகள் குறித்த மனுவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குவார் எனக் கூறப்படுகிறது.
மானிய விலை மண்ணெண்ணெய் வினியோகத்தை மின் இணைப்பு அடிப்படையில் முறைப்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.
இதேபோல் பொது வினியோகத்தில் உணவுப் பொருள் மானியம் மற்றும் அளவு குறைப்பு, ஆதார் அட்டையை, சமையல் எரிவாயு மானியத்துடன் இணைத்தல், இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்பு, காவிரி மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை மனு அளிப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications