கரும்புக்கான ஆதாய விலை ரூ.2,650 ஆக நீடிப்பு: தமிழக முதல்வர் அறிவிப்பு
சென்னை: நடப்பாண்டு கரும்புக்கான ஆதாய விலை ரூ.2,650 ஆக நீடிக்கும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கை:
கரும்பு உற்பத்தியைப் பெருக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்து வரும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விடக் கூடுதலான விலையை தமிழக அரசு வழங்கி வருகிறது.

2011-12 ஆம் ஆண்டு டன் ஒன்றுக்கு 2,100 ரூபாய் எனவும்; 2012-13 ஆம்ஆண்டுக்கு 2,350 ரூபாய் எனவும்; 2013-14 ஆம் ஆண்டுக்கு 2,650 ரூபாய் எனவும் கரும்பின் விலையை முன்னாள் முதல்வர் நிர்ணயித்தார்.
இந்நிலையில், 2014-15 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு 2,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.
தற்போது சர்க்கரைத் தொழிலில் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அண்டை மாநிலமான கர்நாடகம் மத்திய அரசு அறிவித்த ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாய் என்ற விலையை முதலில் வழங்கவும், பின்னர் டாக்டர் ரங்கராஜன் குழு பரிந்துரையான வருவாய் பகிர்மான கொள்கைப்படி விலை நிர்ணயம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளது.
இதே அடிப்படையில், மகாராஷ்டிரா மாநில அரசும் முடிவு செய்துள்ளது. இருப்பினும், தமிழக கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயித்த விலையான டன் ஒன்றுக்கு 2,200 ரூபாயுடன், மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 450 ரூபாய் உயர்த்தி, டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ3,500ஆக உயர்த்தி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications