ஆமாம் அரசே, பாட்டு என்னுடையது தான்: ஓ.பி.எஸ். பற்றி ஒன் இந்தியா வாசகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க. ஸ்டாலினும் அதிமுக அரசை பினாமி அரசு என்பதற்கு முதல்வர் ஓ. செல்வம் கண்டனம் தெரிவித்தது பற்றி ஒன் இந்தியா வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தாலும் அவரை இயக்குவது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க. ஸ்டாலினும் விமர்சித்து வருகிறார்கள். அவர்கள் அதிமுக அரசை பினாமி அரசு என்று தொடர்ந்து கூறி வருவதற்கு பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

TN CM condemns Karunanidhi: Readers' comment

இந்த செய்தியை ஒன் இந்தியாவில் பார்த்த வாசகர்கள் எழுதிய கருத்துக்களில் சில நீங்கள் படிக்க,

கோபால கிருஷ்ணன் மாரிமுத்து:

அய்யா பன்னீர்செல்வம் அவர்களே, உங்கள் கட்சியின் தலைவியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எந்த விதத்திலும் மக்களை ஏமாற்றுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். நீங்கள் விட்ட இந்த அறிக்கையே போயஸ் கார்டனில் ஒப்புதல் வாங்கிய பின்தான் வெளியிடப்படிருக்கும். பெயருக்குத்தான் நீங்கள் முதல்வர், இதனை நீங்களே பல வழிகளில் வெளிப்படுத்தி உள்ளீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், பின் இருந்து செயல்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர். அப்படி இருக்க உங்களின் கோபமும், அறிக்கையும் நியாயமற்றது. நீங்கள் இன்றுவரை அவர்களை minority என்று கூறுகிறீர்கள், அவரகள் பினாமி என்கிறார்கள் , உங்களுக்குள் எந்த வித்தியாசமும் கிடையாது. அறிக்கை விடுவதை தவிர்த்து உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ(??) அதை மக்களுக்கு செய்யுங்கள்.

சாம்:

பினாமியா இல்ல சுனாமியா... பன்னீரு முடிவு பண்ணிகொங்க

மணிமாறன் வீராசாமி:

இந்த வியாக்கியானம் கொடுக்கிற நேரத்தை நிர்வாகத்தில் செலவிடுங்கள்....எங்கும் ஒரே குப்பை...எதிலும் ஒரே குழப்பம்....

கடைத் தமிழன்:

/// விளக்கத்தை கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் நன்கு படித்து புரிந்து கொண்டால் அ.தி.மு.க. அரசு, பெரும்பான்மை அரசு, அதாவது மெஜாரிட்டி அரசு என்பது புரிய வரும் ///

ஹேப்பி பர்த் டே... டே... டே... டே... டூ யூ !

ஆமாம் அரசே, பாட்டு என்னுடையதுதான்...

மண்டபத்துல எவனோ எழுதிக்‌ கொடுத்ததை வாங்கிட்டு வந்தா... இங்க வந்து வாசிக்கிறேன்?

என்னுடையதுதான்! என்னுடையதுதான்!! என்னுடையதுதான் ஐயா...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+