உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை : முதல்வர்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெறும். தமிழ் மொழி சொற்களைத் தொகுக்கும் சொற்குவை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன முதுகலை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்படும் என்றும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை ரூபாய் 1 கோடியில் ஏற்படுத்தப்படும்.
விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மானியமாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். இறகுப் பந்து அகாடெமி ரூபாய் 10 கோடி செலவில் அமைக்கப்படும். வேலூரில் மாவட்ட விளையாட்டு வளாகம் ரூபாய் 17.30 கோடியில் கட்டப்படும். திருச்செந்தூர் முருகன் கோவிலில் 30 கோடியில் பக்தர்கள் தங்க விடுதிகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications