கிரெடாயின் பிரமாண்ட பிராப்பர்டி எக்ஸ்போ 'ஃபேர்ப்ரோ 2018- முதல்வர் எடப்பாடியார் தொடங்கி வைத்தார்
கிரெடாயின் எக்ஸ்போவை முதல்வர் எடப்பாடியார் தொடங்கி வைத்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிரெடாயின் பிரமாண்ட பிராப்பர்டி எக்ஸ்போவான ஃபேர்ப்ரோ 2018-ஐ சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.
ஃபேர்ப்ரோ 2018-ல் பங்கேற்றுள்ள செயல்திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்றவை. இன்று முதல் 3 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்.

இதில் 85-க்கும் மேற்பட்ட டெவலப்பர்களிடம் இருந்து 300க்கும் மேற்பட்ட பிராப்பர்டிகள் டிஸ்பிளே செய்யப்படுகின்றன.
இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பிஎன்பி ஹவுசிங், எச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்கின்றன. சென்னை நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
இன்றைய தொடக்க விழாவில் வீட்டு வசதி துறை செயலாளர் கிருஷ்ணன், சிஎம்டிஏ செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,












Click it and Unblock the Notifications