For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ரூ.236 கோடியிலான திட்டங்கள்.. முதல்வர் தொடங்கி வைத்தார்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.236 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புதிய கட்டடங்களையும், பல்வேறு நலத்திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.236 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று கேடிசி நகர் மாதா மாளிகையில் முதல்வர் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் மட்டும் ரூ.88 கோடி அளவிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

TN CM inaugurates Rs 236 cr welfare schemes in 3 Dts

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.22.50 கோடி மதிப்பிலான திட்டங்களையும், . தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.124.90 கோடி திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

விழா முடிந்ததும் கேடிசி நகரில் இருந்து நான்கு வழிசாலை வழியாக மதுரை புறப்பட்ட முதல்வர் அங்கு உலக தமிழ் சங்கத்தில் மாலை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து கார் மூலம் இரவு முதல்வர் நெல்லை வந்தார்.

அவர் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் இரவு தங்கினார். முதல்வர் வருகையை ஓட்டி எஸ்பி விக்ரமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

English summary
TN CM Edappadi Palanisamy has inaugurated Rs. 236 Crore worth various welfare schemes in Nellai, Tuticorin and Kanyakumari Districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X