இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய நிகழ்வாக, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் மீன்பிடிக்க சென்றபோது 31-5-2016 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாக் நீரிணையில் மீன்பிடிக்கும் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமையை இலங்கை அரசு தொடர்ந்து மீறுகிறது.
மேலும், மீனவர்களிள் படகுகளையும் மீன்பிடி சாதனங்களையும் விடுவிக்காத இலங்கை அரசின் போக்கு தமிழக மீனவர்களிடையே கடும் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தாங்கள் இதனை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று படகுகள் மேலும் சேதம் அடைவதற்குள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
இலங்கை கடற்படை கைது செய்த 7 மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 89 படகுகளையும் தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications