மத்திய அரசுடன் முதல்வர் ஓ.பி.எஸ்-ஸின் முதல் சந்திப்பு- பறக்கும் சாலை குறித்து பொன்னாருடன் பேச்சு
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பின்னர் யாரையும் சந்திக்காமல் இருந்து வந்தார். பொதுவாக முதல்வர் பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது வழக்கம்.
ஆனால் முதல்வர் பன்னீர்செல்வமோ யாரையுமே சந்திக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் முதல்வர் பன்னீர்செல்வத்தை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
முதல்வர் பதவியில் ஓ. பன்னீர்செல்வம் அமர்ந்த பிறகு அவர் மேற்கொண்ட முதலாவது சந்திப்பு இது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினோம். இத்திட்டத்தை செயலாக்குவது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.
மேலும் இதற்கான நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தோம். குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த மத்திய அரசிடம் ஒப்படைக் கோரும் கடிதத்தையும் முதல்வரிடம் கொடுத்தேன். என்னால் இயன்ற அளவுக்கு தமிழகத்துக்கான திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பேன்.
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 ராமேஸ்வரம் மீனவர்களை மீட்கும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications