விஷயம் கேள்விப்பட்டு வேதனையடைந்தேன்.. விரைவில் குணமடைந்து வாங்க.. மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் ட்வீட்!
சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இன்று மதியம் கொல்கத்தா திரும்புவதற்காக ஹெலிகாப்டரில் பாக்டோக்ரா சென்றார் மம்தா பானர்ஜி. ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக பாக்டோக்ரா நோக்கி ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது, கனமழை பெய்ததால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது, மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதும் மம்தா பானர்ஜி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

மம்தா பானர்ஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மம்தா பானர்ஜியின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு கவலையடைந்தேன். ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக தரையிறங்கியதில் காயம் அடைந்த மம்தா பானர்ஜி, விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications