வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி.. முதல்வராக முதல் கடிதம்
தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நன்றி கூறி கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வர் என்ற வகையில் அவர் எழுதிய முதல் கடிதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று பதவி ஏற்றார். அதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நன்றி கூறி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள எனக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எங்களது பெரும் மதிப்பிற்குரிய தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு திட்டங்களுக்கு தங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் என்ற வகையில் எழுதிய முதல் கடிதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications