சென்னையில் ஐபிஎல் தேவையா?... திருநாவுக்கரசர் சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் தேவையா என்பதை அந்த அமைப்பு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

உதகை: தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் தேவையா என்பதை அந்த அமைப்பு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை நீர்த்துப் போகச் செய்வதை ஏற்க முடியாது. இந்த சட்டத்திருத்த்தால் தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தான் அதிகரிக்கும். அவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானதாகிவிடும்.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் தான் சென்னையில் நாளை ஐபிஎல் போட்டிகள் நடக்கிறது. சென்னையில் ஐபிஎல் போட்டி தற்போதைய நிலையில் தேவை தானா என்பதை அந்த அமைப்பு தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும், அதைவிடுத்து கர்நாடக அரசை விமர்சிக்கக் கூடாது என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications