சத்தீஸ்கர் தேர்தல் வன்முறை- பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர்!
கன்னியாகுமரி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட தேர்தலின் போது மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாண் கிளெமண்ட் என்பது தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலால் அங்கு மத்திய பாதுகாப்புபடையினரும், ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வாக்குப் பதிவின் போது பல இடங்களில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பலியானதாக கூறப்பட்டது.

தற்போது இறந்த வீரர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்த பாலூர் கம்பிளார் பகுதியைச் சேர்ந்த வர்கீஸின் மகன் ஜாண் கிளெமண்ட் என தெரியவந்துள்ளது.கிளமெண்ட் மனைவி மேரி ஜோஸ்பின் கில்டாபாய். இவர்களுக்கு டிர்ஜின் ஜோசப் என்ற மகனும், டிபிசிலின் ஜோஸி என்ற மகளும் உள்ளனர்.
கிளமண்ட் நேற்று தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற தகவலை காலையில் மனைவியிடம் போனில் தெரிவித்துள்ளார். மாலையில் அவர் இறந்து போன தகவலை சி.ஆர்.பி.எப். உயர் அதிகாரிகள் கிளமண்ட் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் கிளமண்ட்டின் மனைவி மற்றும் குழந்தைகள் அலறி துடித்தனர். கிளமெண்ட் மரண செய்தி கேட்டதும் அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications