ஜெ.வின் கட்டளையே சாசனம்.. சட்டசபையில் பாகுபலி வசனம் பேசிய ஓ.பி.எஸ்!

ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசி இருக்கிறார்.

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நிறைய முக்கியமான விஷயங்கள் நடந்தது. அதன்படி, இன்று சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் அதன் மீதான விவாதமும் நடைபெற்றது.

TN De. CM speaks Bahubali film dialogue in Assembly

இந்த விவாதத்திற்கு பின் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்தும் பேசினார். அதேபோல் சேலம் 8 வழி குறித்தும் பேசினார்.

அதன்படி, சேலம் 8 வழி சாலை மக்களுக்கு பெரிய அளவில் பயனளிக்கும். திமுக காலத்திலும் கூட இப்படி நடந்தது. ஆனால் சேலம் 8 வழி சாலைக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது. மக்கள் தாங்களாக முன்வந்து சாலைக்காக நிலம் கொடுக்கிறார்கள் என்றார்.

மேலும் வழக்கு குறித்து வெளிப்படையாக பேசலாம் சில விஷயங்களை மட்டும் குறிப்பிட்டார். அதன்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழிநடத்திய கட்சி இது. அவரின் வழியை பின்பற்றித்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம். நமக்கு சிலர் துரோகம் செய்துவிட்டனர். நமக்கு துரோகம் செய்தவர்களை, நாமே சூரசம்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டளை படி எதிரிகளை அழிக்க வேண்டும். ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம் என்று பாகுபலி வசனத்தை பேசி பேச்சை முடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+