பாதுகாப்பு கோரி தமிழகத்தில் 30 ஆயிரம் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி 30 ஆயிரம் டாக்டர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர வேறு எந்த மருத்துவ சேவைகளும் அளிக்கப்படவில்லை.

மருத்துவமனைகளில் எதிர்பாராமல் இறப்புகள் ஏற்பட்டால் மருத்துவமனைகள் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.

மருத்துவ சேவையை பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கம் வலியுறுத்தி வந்தது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 24 மணி நேரம் தனியார் மருத்துவமனைகள் செயல்படாது என அறிவித்தது.

இதுகுறித்து தமிழக அரசு பேச்சு நடத்தி தீர்வு காணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு பேச்சுவார்த்தை நடத்தாத காரணத்தினால் திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம் நடைபெற்றது.

டாக்டர்கள் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் உள்ள 3,750 தனியார் மருத்துவமனைகளும் இன்று செயல்படவில்லை. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு மருத்துவர்கள் கருப்பு நிற பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

குமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் தனியார் டாக்டர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.

மேலும் அவர்கள் மருத்துவமனை முன்பு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் அருள்பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட வில்லை.

பெரிய, சிறிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். ஒரு சில தனியார் மருத்துவ மனைகளில் முகப்பு வாசல் மூடப்பட்டு இருந்தது.

இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும் அவசர சிகிச்சை, அறுவைசிகிச்சை போன்றவை வழக்கம் போல தனியார் மருத்துவமனைகளில் நடந்தன.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டன.

மேலும், அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க செல்லவில்லை. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+