ஓட்டு போட சொந்த ஊர் செல்ல அலைமோதிய பயணிகள் - கோயம்பேட்டில் மறியல்
சென்னை: தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் வாக்களிக்க அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சிறப்பு பேருந்துகள் போதுமானதாக இல்லை என்று கூறி ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 232 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. ஜனநாயகக் கடமையாற்றுவதற்கான வெளியூரில் பணிபுரியும் பலரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

தலைநகர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தேர்தல் ஓட்டு போடுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர். இதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாட்களாக மக்கள் கூட்டத்தால் திருவிழா கோலமாக காணப்பட்டது.
வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான நேற்றும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் இயக்கப்படும் பேருந்துகள் போதுமானதாக இல்லை எனக் கூறி சிலர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் தங்களின் உடைமைகளையும் பொருள்களையும் வைத்துக்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரைந்து வந்து, சமாதானம் செய்தனர். இதனையடுத்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள் அனைவரும் வாக்களிக்க சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications