மக்களே அடுத்த அதிர்ச்சிக்கு தயாராகுங்க... சசி சிறைக்கு போனால் திவாகரன் முதல்வராக 50% வாய்ப்பு!
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு போனால் மன்னார்குடி திவாகரன் முதல்வராகலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: சசிகலா முதல்வராகப் போகிறாரே என்ற கொந்தளிப்பில் தமிழகமே ஆவேசத்தில் இருக்கிறது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு போனால் மன்னார்குடி திவாகரனுக்குதான் முதல்வராகும் வாய்ப்புகள் 50% இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் உதவியாளர் என்பதை பயன்படுத்தி அதிமுகவை கபளீகரம் செய்தவர் சசிகலா. அவரை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க முடிவு செய்திருக்கிறது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 'கூட்டம்'.
சசிகலாவின் இந்த பேராசைக்கு ஆப்பு வைக்கும் வகையில் சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்துக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. இதனால் சசிகலாவுக்கு பதில் அடுத்த முதல்வர் யார் என பரமபத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கும்பல்.

நடராஜன்
முதல்வர் நாற்காலி மீது அடங்காத வெறியுடன் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன், சொகுசு கார் இறக்குமதி வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற குற்றவாளி. அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

தினகரன்
அதேபோல் அடுத்த பொதுச்செயலர், அடுத்த முதல்வர் என கெத்துகாட்டிக் கொண்டிருக்கிறார் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன்.ஆனால் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ரூ28 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நீதிமன்றத்தால் 'குற்றவாளி' என அறிவிக்கப்பட்டவர் தினகரன். ஆகையால் நடராஜன், தினகரன் அடுத்த முதல்வராகவே முடியாது.

திவாகரன்
தற்போதைய நிலையில் மன்னார்குடி கோஷ்டியில் திவாகரனுக்கு முதல்வராக 50% வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்களான தம்பிதுரை உள்ளிட்டோர் மன்னார்குடி குடும்பத்தில் 'சின்னம்மா' சசிகலாவைத் தவிர வேறு யாரும் முதல்வர் நாற்காலியில் உட்காரவே கூடாது என அடம்பிடிக்கிறார்களாம்.

நம்பிக்கை
இருந்தபோதும் இப்படியான அதிருப்தி குரல்களை அடக்க தெரியாதா என்ன மன்னார்குடி கோஷ்டிக்கு... ஆகையால் திவாகரனை இப்போதே முதல்வர் ரேஞ்சுக்கு கொண்டாட தொடங்கிவிட்டனர் மன்னார்குடி அடிப்பொடிகள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications