கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு: 22-ந் தேதி காவிரி டெல்டாவில் "பந்த்" அறிவிப்பு!!
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா 2 அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோரை இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் பணியை உடன் தடுத்து நிறுத்திட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றைஉடன் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ந் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம், சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவது என அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோருவதற்காக விவசாய சங்கங்களின் தலைவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர். சென்னை கோபாலபுரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விவசாயிகள் ஆதரவு கோரினர். அப்போது இப் போராட்டத்துக்கு திமுக முழுமையாக ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.
மேலும் புதிய கட்சி தொடங்கி உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து ஆதரவு கோரினர். இந்தப் போராட்டத்துக்கு தமது கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும் வாசன் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கருணாநிதியுடன் வீரபாண்டியார் குடும்பம் சந்திப்பு

இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியை மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினர் இன்று சந்தித்து பேசினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications