குறுவை சாகுபடிக்கு 100 டிஎம்சி கேட்க சொன்னா... குடிக்க 4 டிஎம்சி உத்தரவு வாங்கி வந்த தமிழக அரசு!
குறுவை சாகுபடிக்கு 100 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்பது விவசாயிகள் கோரிக்கை.
சென்னை: காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்ய 100 டிஎம்சி நீராவது தேவை என்கிற நிலையில் குடிப்பதற்கு 4 டிஎம்சி நீருக்கான உத்தரவைத்தான் வாங்கி வந்துள்ளது தமிழக அரசு.
ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை சாகுபடி நடைபெறும். இதற்கு குறைந்தது 100 டிஎம்சி நீராவது தேவை.

அடுத்த மாதம் குறுவை சாகுபடி தொடங்கப்பட வேண்டிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துதான் பேசினார்.
ஆனால் குறுவை சாகுபடிக்கு 100 டிஎம்சி நீராவது தேவை; ஆகையால் மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் அல்லது குறுவைக்கான நீரை திறந்துவிட வேண்டும் என்கிற வாதம் எல்லாம் இல்லை. தமிழகத்தில் குடிக்கவே நீர் இல்லை என ஒரு வார்த்தையை விட்டார். உடனே அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தலைமை நீதிபதி, 4 டிஎம்சி நீர் குடிக்க திறந்துவிடுங்க என ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
தமிழகத்தில் குடிநீர் கேட்டு கொந்தளிக்கவில்லை. கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை காவிரி பாசனத்துக்கான நீரை திறந்துவிடுங்கள்; மேலாண்மை வாரியம் அமையுங்கள் என்பதுதான் போராட்டம்.
ஏதோ காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு போதுமான நீர் இல்லை என்பதற்கான போராட்டம் இங்கே நடப்பது போல தமிழக அரசு வாதிட்டிருப்பது விவசாயிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. முப்போகம் கண்ட காவிரி டெல்டா ஒரு போகத்துக்கே வழியில்லாமல் போகிறதே!
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications