இதுதான் முதல் முறை.. தீயணைப்புத் துறை பெண் அதிகாரி ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்!
டெல்லி: தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா, மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு அதிகாரிகளாக பணிபுரிபவர்கள், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் பதவிக்கு நியமனம் பெற எழுத்துத் தேர்வில் பங்கற்பார்கள். அதன்படி மாநில அரசு தனது விருப்ப அதிகாரங்களைப் பயன்படுத்தி, நேர்காணலை நடத்தி, எஸ்சிஎஸ் அல்லாத ஒதுக்கீட்டிலிருந்து காலியாக உள்ள ஐஏஎஸ் பதவியை நிரப்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) பெயர்களை பரிந்துரைக்கு அனுப்பும்.

யுபிஎஸ்சி தேர்வாணையம் அவர்களுக்கு நேர்காணல் நடத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யும். இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் பெறுபவர்கள் மீது அவர்கள் பணிக்காலத்தில் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை ஹிஸ்டரியும் இருக்கக்கூடாது. மேலும், பணிக்காலத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.
இந்நிலையில், தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றும் என். பிரியா, மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி பிரியாவுக்கு 2022 தமிழ்நாடு கேடர் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தீயணைப்புத்துறை அதிகாரி ப்ரியாவுக்கு ஐஏஎஸ் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தீயணைப்புத் துறையில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக ஒருவர் நியமிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications