பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு- ஜெ. அறிவிப்பு!!
சென்னை: பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தலைவர்கள் வாழ்த்து
மாரியப்பனுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரை உலகத்தினரும் மாரியப்பனின் சரித்திர சாதனைக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

கார் கிடைக்குமா?
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மாரியப்பனுக்கு ரூ50,000 பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு கார் பரிசு அளித்தது போல மாரியப்பனுக்கும் கிடைக்குமா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழக அரசு வாழ்த்து
தற்போது தமிழக அரசும் மாரியப்பன் தங்கவேலுக்கு பரிசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் மாரியன் என பாராட்டியுள்ளார்.

ரூ2 கோடி பரிசும் நன்றியும்
மேலும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கும் மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தம்முடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாரியப்பனுக்கு ரூ2 கோடி பரிசுத் தொகையை அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரியப்பனின் தாயார் சரோஜா நன்றி தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications