ஜல்லிக்கட்டுக்குத்தான் தடையாம், ஏறுதழுவுதலுக்கு இல்லை… இன்னா சொல்றாரு இல. கணேசன்?

ஏறுதழுவுதலை தாராளமாக நடத்தலாம் என்று பாஜக எம்பி இல. கணேசன் தமிழக அரசுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால் கவனமாக ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரைக்கும் ஏறுதழுவுதலும், ஜல்லிக்கட்டும் ஒன்று என்று நினைத்திருத்த தமிழர்களுக்கு பாஜக எம்பி இல. கணேசன் புது விளக்கத்தை அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டும் ஏறுதழுவுதலும் ஒன்று என்றுதான் இதுவரை எல்லோரும் நினைத்திருந்தோம். இதனை மஞ்சு விரட்டு என்றும் அழைப்பார்கள். இந்த விளையாட்டை நடத்தக் கூடாது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழர்களுக்கெதிரான நிலைபாட்டை எடுத்து கடுப்பேற்றி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று தெளிவாக இருக்கும் போது, பாஜக தலைவர் தமிழிசை, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் பாஜக ஆதரிக்கும் என்று தமாஷ் செய்துள்ளார்.

சூப்பர் ஐடியா

சூப்பர் ஐடியா

இது என்ன நிலைப்பாடு என்று தமிழக மக்கள் விழிப் பிதுங்கி நிற்க, இதே கட்சியைச் சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ராஜ்ய சபா எம்பியுமான இல. கணேசன் தமிழிசையையும் தாண்டி சூப்பரான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

ஏறுதழுவுதலுக்கு தடை இல்லை

ஏறுதழுவுதலுக்கு தடை இல்லை

அதாவது, தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த மட்டுமே உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் ஏறுதழுவுதல் நடத்த எந்தவித தடையும் விதிக்கவில்லை. எனவே தமிழக அரசு ஏறுதழுவுதல் போட்டிகளை அறிவித்து நடத்த வேண்டும் என்று ஐடியா கொடுத்துள்ளார் இல.கணேசன்.

கூகுளிலும் இல்லை

கூகுளிலும் இல்லை

இவரின் இந்தக் கருத்தைக் கேட்டு, பலர் மண்டை பிய்த்துக் கொண்டு ஏறுதழுதலுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எத்தனை வித்தியாசம் என்று கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கமல் பதில்

கமல் பதில்

நேற்று கூட நடிகர் கமல் ஒரு பேட்டியில், ஜல்லிக்கட்டை ஏறுதழுவுதல் என்று சொல்வது மிகச் சிறந்தது என்று கூறினார். ஆனால் இல. கணேசன் ஏறுதழுதல் வேறு, ஜல்லிக்கட்டு வேறு என்று குழப்பி இருக்கிறார்.

குழப்பும் தலைவர்கள்

குழப்பும் தலைவர்கள்

ஒரு பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்ப தமிழிசை ஒன்றை சொல்வார், பொன். ராதாகிருஷ்ணன் ஒன்றைச் சொல்வார். மத்திய அரசு ஒன்றைச் சொல்லும். இது இல. கணேசனுக்கான நேரம். அதனால் அவரும் ஒன்றை சொல்லி இருக்கிறார் என்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+