தீபாவளிப் பண்டிகை: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, காங். தலைவர் ஞானதேசிகன் வாழ்த்து
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தமிழக, ஆந்திர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தீபத் திருநாளான தீபாவளியைக் கொண்டாடும் தமிழக, ஆந்திர மக்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக, ஆந்திர மக்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளித் திருநாள் அறியாமை எனும் பேரிருளை விரட்டட்டும், உன்னத சிந்தனைகளால் நமது உள்ளங்களை ஒளிரச் செய்யட்டும்.
நமது மனங்களில் அன்பு, இரக்கம் விளையச் செய்யட்டும். அதனால் அமைதியும், ஒற்றுமையும் நிலவட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
ஞானதேசிகன் வாழ்த்து
இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "தீபத்திருவிழா என்று வணங்கப்படும் தீபாவளித் திருநாள் நாடெங்கும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. ஆவளி என்றால் வரிசை என்று பொருள்படும்.
எனவே இல்லங்களில் தீபங்களை வரிசையாக அலங்கரித்து வைத்து ஆன்மீக உணர்வோடு ஆண்டுக்கு ஒருநாள் அனைவரையும் குதூகலிக்க வைக்கும் பண்டிகை இது.
ஒரு மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் எல்லா மதத்தினரும், இனத்தினரும் இணைந்து கொண்டாடும் தீபாவளித் திருநாளில் தீவிரவாதத்தை தீயிட்டு முழுமையாய் ஒழிப்போம் என்று கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications