புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு ரூ. 5 கோடி உதவி - ஓ.பன்னீர் செல்வம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹூட் ஹூட் புயலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள ஆந்திர மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவியை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹூட் ஹூட் புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள ஆந்திர மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் மின்கட்டமைப்பை சீரமைக்க 100 மின்மாற்றிகள், 5,000 மின்கம்பங்கள், 10 ஆயிரம் இன்சுலேட்டர்கள் மற்றும் இதர மின்சாதனங்களும் வழங்கப்படும். ஆந்திராவுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அடங்கிய மீட்புக் குழுவும் அனுப்பி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications