அண்ணாமலைக்கு செக் வைக்கும் தமிழக அரசு! தனியாக வழக்குத் தொடர தீவிர சட்ட ஆலோசனை!
சென்னை: அமைச்சர்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே அண்ணாமலை மீது அரசு வழக்கு போட இருப்பதை மூத்த அமைச்சர் கே.என்.நேரு உறுதி செய்துள்ளார்.
திமுக முக்கியப் பிரமுகர்கள் மீதும், மூத்த அமைச்சர்கள் மீதும் Dmk files என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

அண்ணாமலை வெளியிடும் சொத்துப்பட்டியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஏற்கனவே இணையதளங்களில் உள்ள சொத்து விவரங்களை மறுபடியும் இடம்பெற்றிருந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இருப்பினும் இதனை இப்படியே விட்டால் அடுத்தடுத்து இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடரக் கூடும் என்பதால் திமுக மிக சீரியஸாக இதனை கையாள்கிறது.
அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க 48 மணி நேரம் கெடு விதித்து திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதோடு, அவதூறு பரப்பியதற்கு இழப்பீடாக ரூ.500 கோடி தர வேண்டும் எனக் கேட்டு அதிர்ச்சி கொடுத்தது.
இது ஒரு புறம் என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை மீது தனியாக ஒரு வழ்க்கு தொடருவேன் என்றும் சும்மா விட மாட்டேன் எனவுன் சீறியிருக்கிறார்.

அண்ணாமலைக்கு திமுக கொடுக்கும் குடைச்சல் போதாதென்று தமிழக அரசு தரப்பிலும் அவதூறு வழக்கு தொடருவதற்கு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
ஏனெனில் அமைச்சர்கள் பலர் மீதும் அண்ணாமலை திமுக பைல்ஸ்ஸில் குற்றச்சாட்டுக்களை கூறியிருப்பதால் அவர் மீது அரசு சார்பில் வழக்கு தொடரப்படுவது உறுதியாகியுள்ளது.
அண்ணாமலை மீது அரசு வழக்கு போட இருப்பதை அமைச்சர் நேரு நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட உறுதி செய்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications