Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதை விடவா கேவலம் வேணும். தினகரனுக்காக ஆர்.கே.நகரில் பணம் விநியோகித்த மதுரை அரசு வக்கீல்!

ஆர்கே நகரில் தினகரனுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த போது மதுரை அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் சிக்கினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனுக்காக பணப் பட்டுவாடா செய்த மதுரை அரசு வழக்கறிஞர் தமிழ்ச் செல்வன் பறக்கும் படை அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகரில் பணத்தை வாரி இறைக்கிறது தினகரன் கோஷ்டி. அதுவும் வெளியூர் நபர்களை வரவழைத்து திட்டமிட்ட வியூகத்துடன் பணப்பட்டுவாடா செய்கிறது தினகரன் தரப்பு.

எல்லாமே தினகரன் ஆட்கள்

எல்லாமே தினகரன் ஆட்கள்

ஆர்கே நகரில் இதுவரை பணப்பட்டுவாடா செய்ததில் பிடிபட்ட பலருமே டிடிவி தினகரனின் ஆட்கள்தான். அதேநேரத்தில் சிக்கிய பலரையும் போலீசார் பாதிவழியிலேயே ராஜமரியாதையுடன் அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

எதிர்க்கட்சிகள் புகார்

எதிர்க்கட்சிகள் புகார்

இதனால் வேறுவழியின்றி தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கைகோர்த்து புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தண்டையார்பேட்டையில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

சிக்கிய அரசு வக்கீல்

சிக்கிய அரசு வக்கீல்

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பறக்கும் படையினர் அங்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட நபரை சுற்றி வளைத்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்ச் செல்வன்தான் பிடிபட்டவர் என தெரியவந்தது.

பரபரப்பு

பரபரப்பு

அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு வழக்கறிஞரே சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+