மன்னர் ஜவகர் சஸ்பெண்ட்: ரத்து செய்ய தமிழக அரசு மறுப்பு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹரை இடைநீக்கம் செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மன்னர் ஜவஹர் கடந்த நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஓய்வு பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்பு தமிழக அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னர் ஜவஹர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மன்னர் ஜவஹருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், ஜவஹரை இடைநீக்கம் செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications