Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் அநீதி: மாணவர்கள் வெளிமாநிலம் செல்ல தமிழக அரசே உதவ வேண்டும்.. தமிழிசை கோரிக்கை

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்கள் செல்ல வசதியாக, தமிழக அரசே பயண செலவிற்கு பணம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்லத்தான் வேண்டும்- வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்கள் செல்ல வசதியாக, தமிழக அரசே பயண செலவிற்கு பணம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    TN govt should help the students to write their NEET in other states says, Tamilisai

    இதில் சிபிஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு உதவும் வகையில் இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புதிய ஆலோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

    அவர் ''நீட் எழுதச்செல்லும் மாணவர்களின் பயணச் செலவை தமிழக அரசு ஏற்கவேண்டும்.பணபலம் இன்றி மனபலத்தோடு தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரசு உதவலாம். மாணவர்கள் அவ்வளவு தூரம் சென்று தேர்வு எழுத அரசுதான் உதவ வேண்டும்'' என்றுள்ளார்.

    மேலும் ''மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீட் மையங்களை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். மாணவர்கள்தான் இடங்கள் இல்லையென்று வெளிமாநிலத்தை தேர்வு செய்துள்ளனர்'' என்றுள்ளார். ஆனால் மத்திய அரசின் சிபிஎஸ்இ அமைப்புதான் இடங்களை தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+