ஜெயலலிதாவின் பொழுதுபோக்கு... விவசாயம்... அரசு இணையதளம் கூறுகிறது!
சென்னை: தமிழக முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா வந்துள்ளதால் அரசு இணையதளங்களிலும் உடனடியாக மாற்றங்கள் வந்து விட்டன. அனைத்துத் தளங்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படம், தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழக அரசின் http://www.tn.gov.in/ இணையதளம் மற்றும் செய்தி மக்கள் விளம்பரத்துறை இணையதளம் உள்ளிட்ட அனைத்து இணையதளங்களிலும் முதல்வர் பெயர் ஜெயலிதா என்று மாற்றப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் முதல்வரான போது இப்படி உடனடியாக மாற்றம் செய்யப்படவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது. எனவே மீண்டும் அதுபோன்ற "சர்ச்சை" வந்து விடாத வண்ணம் அரசுத் தரப்பில் துரிதமாக செயல்பட்டிருக்கிறார்கள் போலும்.
http://www.tn.gov.in இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் குறிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் பிறந்த. ஊர், பிறந்த தேதி, அவரது கல்வித் தகுதி, சமுதாயப் பணிகள், வாங்கிய பட்டங்கள், பெற்ற பெருமைகளை பட்டியலிட்டுள்ளனர்.

அவர் ஆங்கிலம்,தமிழ் ஆகிய மொழிகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளதாகவும், தமிழில் நான்கு முழு நீள நாவல்களும், பல சிறு கதைகள் எழுதியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு பிடித்த விளையாட்டுகள், கிரிக்கெட், டென்னிஸ், நீந்துதல், குதிரை ஏற்றம், கூடைப்பந்து, சதுரங்கம், உடற்பயிற்சி விளையாட்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோக அவரது தனித் திறமைகள், பன்மொழி பேசும் திறமை உள்ளிட்டவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது பொழுது போக்காக படித்தல், இசை ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், விவசாயமும் அவரது பொழுதுபோக்குகளில் ஒன்று என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications