தமிழகம் தீவிரவாதிகளின் சுற்றுலாத்தலம், அவர்களால் குஜராத்துக்கு போக முடியலை: பாஜக
பரமக்குடி: தமிழகமும் தீவிரவாதிகளின் சுற்றுலாத் தலமாகிவிட்டதாக பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குப்புராமுவுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பரமக்குடி ஐந்துமுனை சாலையில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
வாஜ்பாய் ஆட்சியின்போது விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருந்தது. பொருளாதாரமும் 8 சதவீதம் உயர்ந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸின் ஊழல் ஆட்சி தான் நடக்கிறது. மோடி குஜராத் முதல்வர் ஆனபோது மாநிலம் ரூ.50 கோடி கடனில் இருந்தது. தற்போதோ குஜராத்தில் ரூ.1.5 லட்சம் கோடி கையிருப்பு இருக்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாட்டின் எல்லையில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் 2 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை மதிப்பதே இல்லை.
தமிழகமும் பயங்கரவாதிகளின் சுற்றுலாத் தலமாக தான் உள்ளது. அவர்களால் குஜராத்திற்கு செல்ல முடியவில்லை என்றார்.
முன்னதாக மோடி கேரளா தீவிரவாதிகள் பயிற்சி பெறும் இடமாகிவிட்டது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications