ரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே!
தமிழக மக்கள் விரோதியாகவே பேசுகிறார் ரஜினிகாந்த்.
Recommended Video

சென்னை: அரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமாக முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் மக்கள் விரோத சக்தியாகத்தான் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதை புரிந்து கொள்வாரா?
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை கொள்கை, கோட்பாடு அரசியல் என்றாலே தலை சுற்றிவிடும் என பதில் சொன்னவர். மக்கள் என்னவோ தம்மை அடுத்த முதல்வராக்கிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள் என மிதப்பில் இருக்கிறார்.
இந்த எண்ணத்தில்தான் அரசுக்கு ஆதரவாக, முதலாளிகளுக்கு ஆதரவாக, போலீசுக்கு ஆதரவாக மட்டுமே இடைவிடாமல் பேசி வருகிறார். ரஜினிகாந்தின் இந்த அடாவடித்தனமான ஒடுக்குமுறை பேச்சு தமிழகத்துக்கு ஒன்றும் புதிது அல்ல.

பாஜகவின் ஏகடியம்
தமிழகத்தில் பாஜகவினர் அனைவருமே இப்படித்தான் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறவர்களாக பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பாஜக என்பது வேற்றுகிரக கட்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

பாஜகவை போல பேசும் தமிழக அரசு
தமிழக பாஜகவின் குரலைத்தான் தமிழக அரசு தரப்பும் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டங்களில் சமூக விரோதிகள், தேச விரோதிகள் ஊடுருவிவிட்டதாக பாஜக சொன்னதையே தமிழக அரசு மறு பதிப்பு செய்து வருகிறது. இப்போது எரிகிற நெருப்பில் கந்தக அமிலத்தை ஊற்றுகிற நபராக களமிறக்கப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த்,

கந்தக அமிலத்தை ஊற்றும் ரஜினி
பாஜகவினரும் அரசு தரப்பும் பேசிய பேச்சு மொழி, பாடி லாங்வேஜ் என்பது மக்களை எரிச்சல் படுத்துகிறது என்றால் ரஜினியின் பேச்சு கொதிப்பை ஏற்படுத்துகிறது. ரஜினி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் நெருப்பை கக்குகிறது. அந்த அளவுக்கு மக்களை அவமானப்படுத்தி மக்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.
சுடுகாடாகப் போகுமாம்
மக்கள் போராடவே கூடாது; நீதிமன்றத்துக்கு போகனும்; போராட்டம் நடத்தினால் சுடத்தான் செய்வார்கள், நாடு சுடுகாடாகப் போகும்; ஒவ்வொரு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவுகிறார்கள்; போலீசை அடிச்சது தப்பு என்றெல்லாம் ஏக வசனத்தில் மக்கள் விரோதியாக தன்னை முன்னிறுத்தி பேசுகிறார் ரஜினிகாந்த்.

ரஜினிக்கு காத்திருக்கிறது பாடம்
இத்தகைய மனோநிலை படைத்தவர்கள் மக்கள் விரோத மனிதர்களாகவே பார்க்கப்படுவார்களே தவிர; ஒருநாளும் தலைவராக இருக்க கொஞ்சமும் தகுதியுடன் கூடியவர்களாக கருதப்பட மாட்டார்கள். மகத்தான போராட்டங்களின் மூலம் சமூக மாற்றங்களை சாதித்த தமிழர்களின் மண்ணில் நின்று சாபடுமிடும் ரஜினிகாந்தத் யார்.. அவருக்கு தமிழகம் சரியான பாடத்தைத் தரும்.. இவர் இப்படியே தொடர்ந்து பேசினால்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications