திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: திருமாவளவன், சீமான், கவுதமன் கடும் கண்டனம்!

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும இயக்குனர் கவுதனம் கணட்னம் தெரிவித்துள்னர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மே 17' இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு திருமாவளவன், சீமான் மற்றும கவுதமன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமுருகன் காந்தி மீது மத்திய அரசு அலுவலகத்தைத் தாக்கியது உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதாக சென்னை மாநகர போலீஸ் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தியுடன் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கடந்த 21-ம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 4 பேர் மீது குண்டர் சட்டம்

4 பேர் மீது குண்டர் சட்டம்


தற்போது அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 விசிக கண்டனம்

விசிக கண்டனம்

திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு அழுத்தங்களை தருவதாகவும் அவர் கூறினார்.

 கவுதமன் விமர்சனம்

கவுதமன் விமர்சனம்

திருமுருகன் காந்தி குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது நேர்மையற்ற செயல் என்று இயக்குனர் கவதமன் தெரிவித்துள்ளார். இன உரிமைக்காக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 சீமான் ஆட்சேபணை

சீமான் ஆட்சேபணை

இதே போன்று மத்திய அரசுக்கு பயந்து மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் இனத்திற்காக போராடுபவர்களுக்கு எதிராக செயல் என்றும் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+