உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெல்லை தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகள் மற்றும் சங்கரன்கோயில், ராமநாதபுரம் நகராட்சிகள் உட்பட ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் (6.8.2014) துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இம்மாதம் 13ம் தேதியாகும். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடைபெறும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications