மூடி மூடி திறக்குது வானம்.. மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல்
சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும், ஆங்காங்க கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
ஆந்திரா அருகில், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், ஆந்திராவில் கடும் மழை பொழிவை தந்துள்ளது. அதிகபட்சமாக கலிங்கப்பட்டினத்தில், 32 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், தோவாலாவில், 13 செ.மீ., மற்றும் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றார் அவர்.
சென்னையில்
தலைநகர் சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டமாக உள்ளது. புறநகர்கள் சிலவற்றில் லேசான தூறல் காலையில் காணப்பட்டது. இருப்பினும் இதுவரை மழை பெய்யவில்லை. லேசான வெயிலும் அடிக்கிறது. மாலையில் மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications