தென்மேற்கு வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை சாத்தியம்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வடதமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் பெய்த அளவை விட கொஞ்சம் குறைவான அளவிலேயே பெய்து வருகிறது. குறிப்பாக தற்போது தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.

தற்போது, தென் இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், "கொமரைன் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் நிலைக் கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளனர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications