சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்ம மரணம்
தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் சண்டிகரில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்ற மாணவர் மர்ம மரணடைந்துள்ளார்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த நவம்பர் மாதம்தான் கல்லூரியில் கிருஷ்ணபிரசாத் சேர்ந்திருக்கிறார். இன்று காலை விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிருஷ்ண பிரசாத் மீட்கப்பட்டுள்ளார்.

இத்தகவல் கிடைத்ததும் கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சண்டிகர் விரைந்துள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த கிருஷ்ணபிரசாத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.













Click it and Unblock the Notifications