தமிழக சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் திடீர் உடல்நலக் குறைவால் ஈரோடு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே இன்று காலை 8 மணிக்கு அரசு நிகழ்ச்சியை அமைச்சர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திண்டல், பெருந்துறை ஆகிய இடங்களில் அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பவானி அருகே உள்ள ஆப்பக்கூடலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் அவர் சென்று கொண்டிருந்தார்.

TN Minister hospitalised, condition stable

அவருக்கு செல்லும் வழியில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதவியாளர்கள் விரைந்து அவரை ஆப்பக்கூடலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவர் உதவியோடு ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேரத்திற்கு பின்னர் உடல்நிலை சற்று தேறியதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+