ஊழல் கண்களுக்கு எல்லாமே ஊழலாகத் தான் தெரியும்.. தி.மு.க.,வை சாடிய ஜெயக்குமார்
ஊழல் கண்களுக்கு எல்லாமே ஊழலாகத் தான் தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஊழல் கண்களுக்கு எல்லாமே ஊழலாகத் தான் தெரியும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க.,வை சாடியுள்ளார்.
இன்று சென்னையில், மறைந்த உவமைக் கவிஞர் சுரதாவின் 97வது பிறந்தநாள் விழா நிகழ்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜ ன் ஆகியோர் கலந்துகொண்டு அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதன்பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

மணல் தட்டுப்பாட்டை தீர்க்கவே மணல் குவாரிகள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஊழல் செய்வதற்கான திட்டம் என்று சொல்லி இருக்கிறார். ஊழல் கண்களுக்கு தான் எதில் எல்லாம் ஊழல் செய்யலாம் என்பது தெளிவாகத் தெரியும் அதனால் தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
மேலும், ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க.,வின் ஆட்சி. அவர்கள் எங்களைச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. கமிஷன் என்கிற சொல்லை தமிழகத்தில் பிரபலப்படுத்தியதே தி.மு.க ஆட்சி தான் . ஆனால், மக்களின் நலன் கருதியே இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல் படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications