தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; பைனான்ஸ் செய்கிறார்கள்-அமைச்சர் கருப்பண்ணன் பேச்சு! #farmers
ஈரோடு: தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; வங்கியில் பணத்தைப் போட்டு பைனான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தமிழக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வியாபாரக்கடன் மேளா துவக்க விழாவில் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசியதாவது:
அணையில் இருந்து தண்ணீர் கொடுக்கவில்லை என்று விவசாயிகள் தேவையில்லாமல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இங்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லாதவர் கூட விவசாயி என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள்.

விளம்பரத்துக்காக போராட்டம்
இவர்கள் எல்லாம் பேப்பரிலும், பத்திரிகையிலும் விளம்பரம் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். உண்மையில் விவசாயிகள் பணத்தை வங்கியில் போட்டு வைத்து கொண்டும், பைனான்ஸ் செய்து கொண்டு நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

கோடீஸ்வரர்கள்
விவசாயிகள் யாரும் வறுமையில் இல்லை. அவர்கள் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதியாகவும் தான் இருக்கிறார்கள்.

கோவணம் கட்டிக் கொண்டு...
விவசாயியாக உள்ள ஒருவர் விளம்பரத்துக்காக கோவணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட விண்ணப்பித்து ஊரை ஏமாற்றுகிறார். அணையில் தண்ணீர் இருந்தால் நாங்களே தண்ணீர் திறந்து விடுவோம்.

துடிக்கிறோம்...
இங்குள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லையே என்று தினந்தோறும் நாங்கள் துடிக்கிறோம். எங்களை விமர்சனம் செய்தால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதிர்ச்சி
மக்களை திசை திருப்பும் செயலில் ஒரு சில விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு கே.சி.கருப்பண்ணன் பேசினார். விவசாயிகளை விமர்சனம் செய்து அமைச்சர் பேசியது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications