இன்டஸ்ட்ரியல் ரெவலூசன், இது அசரா புலி.. வாட்ஸ்-அப்பில் வைரலாகும் அமைச்சர் vs டி.ராஜேந்தர் பேச்சு!
சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கமணி, முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து அரைகுறை ஆங்கிலத்தில் புகழ்ந்து தள்ளியதையும், புலி பட பாடல் வெளியீட்டு விழாவில், டி.ராஜேந்தர் நடிகர் விஜயை புகழ்ந்து தள்ளியதையும் ஒப்பிட்டு வாட்ஸ்-அப்பில் வயிறு குலுங்க செய்யும் ஒரு வீடியோ சுற்றி வருகிறது.
சென்னையில் நடந்து முடிந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டு, நிறைவு நாள் நிகழ்ச்சியில், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி, உரையாற்றினார். அப்போது வழக்கம்போல, பெரும்பகுதி ஜெயலலிதாவை பாராட்டுவதில் குறியாக இருந்தார். ஆனால், சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்தில் அடுக்குமொழி குறிப்பெடுத்து வந்து பேசினார். இதை கேட்டு ஜெயலலிதாவும் சிரித்துக்கொண்டே இருந்தார்.
ஜெயலலிதா ஆட்சி பற்றி குறிப்பிட்ட, தங்கமணி, இன்டஸ்டிரியல் ரெவலூசன், சர்ப்ளஸ் பவர் ஜெனரேசன்,
கன்ட்ரோலிங் இன்ப்ளேசன், ஏபிள் அட்மினிஷ்ட்ரேசன், எம்ப்ளாய்ன்ட் ஜெனரேசன் என்றெல்லாம், ஆங்கில அடுக்குமொழியில் அம்மாவை புகழ்ந்தார். ஆனால், அவரது ஆங்கில உச்சரிப்பை கேலி செய்து வாட்ஸ்-அப்பில் அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்கமணி பேச்சை மட்டுமின்றி, புலி பட விழாவில் அட்டகாச புலி, அசத்தல் புலி என டி.ராஜேந்தர் புலியை வரிசைப்படுத்திய வீடியோவையும் இணைந்து ஒரு வீடியோ உருவாக்கி பரவிவருகிறது. செம சிரிப்பை வரவழைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications