ஓகி புயலில் நாம் காட்டிய அக்கறை.. குகை மீட்பில் தாய் அரசின் அக்கறை.. ஏங்கித் தவிக்கும் மக்கள்!
Recommended Video

சென்னை: தாய்லாந்து அரசு, குகையில் சிக்கியவர்களை மீட்க காட்டிய அதி தீவிர அக்கறை தமிழக மக்களை உலுக்கி விட்டது. இங்கு நடக்கும் நிகழ்வுகளையும், தாய்லாந்து அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து புலம்புகின்றனர் மக்கள்.
13 பேர்தானே என்று அலட்சியம் காட்டாமல் தாய்லாந்து அரசு காட்டிய அக்கறை, ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து நடந்த மீட்புப் பணி, நாடே ஒன்று திரண்டு பிரார்த்தித்த நெகிழ்ச்சி என தமிழக மக்கள் அதிசயித்துப் போயுள்ளனர்.
ஆனால் இங்கே சாதாரண கோரிக்கைக்காக போராடிய 13 பேரை குருவி சுடுவது போல சுட்டுக் கொன்ற கொடூரத்தையும் மக்கள் வேதனையுடன் நினைவு கூருகின்றனர்.

இதுதான் உண்மையான தாய்
தாய்லாந்து அரசுதான் உண்மையான தாய் அன்புடன் நடந்து கொண்டது. தனது பிள்ளைகளை மீட்க அது பட்ட பாடு, எடுத்த முயற்சிகளை எத்தனை பாராட்டினாலும் தகும் என்று நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

தமிழகமும் இருக்கே
அதேசமயம், தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகளை மக்கள் நினைவு கூறத் தவறவில்லை. ஓகி புயலின்போது நடந்து கொண்ட அரசுகளின் செயல்பாடுகள், 13 பேர் தூத்துக்குடியில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது ஆகியவற்றை தாய்லாந்து சம்பவத்துடன் மக்கள் ஒப்பிட்டுக் கூறுகின்றனர்.
|
தாய்லாந்து - தமிழ்நாடு வித்தியாசம்
13 உயிர்களை போராடி காப்பாற்றியது ஒருநாடு #தாய்லாந்து போரடியதற்காக 13 உயிர்களை காவு வாகியுள்ளது ஒரு நாடு #தமிழ்நாடு என்கிறார் இவர்.
|
நாடே போராடியது
குகைக்குள்ள மாட்டிக்கிட்ட 13 பேரை காப்பாத்த ஒரு நாட்டோட மொத்த ராணுவமே போராடிச்சினா அது #தாய்லாந்து..!
புயல்ல சிக்கின மீனவன் கடல்ல பாட்டில கட்டிகிட்டு பதறினாலும் எட்டிக்கூட பாக்காம இருந்தா அதுதான் நம்ம தமிழ்நாடு
|
இது மட்டும் நம்ம நாட்டில் நடந்திருந்தால்
இது நம்ம நாட்டில் நடந்திருந்தால் அரசின் சார்பாக சிறுவர்களுக்கு மரணமும் தலா 5 லட்சமும் உறுதி...!! மீட்புபணியில் பேர் போனது நம் அரசு..!!! #தாய்லாந்து #Thailand #ThailandCaveRescue #ThaiCaveRescue
|
மீனவனைக் காப்பாற்ற த மிழ்நாடு
மாணவனை காப்பாற்றியது தாய்லாந்து...
என் மீனவனை காப்பாற்றவில்லை தாய்நாடு !
#ஓகிபுயல்
#தாய்லாந்துகுகை
#Thailandcaverescue
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications