சென்னை-பெங்களூர் தொழில் காரிடார் வழித்தடத்தில் ஆந்திரா துறைமுகமா?: தமிழகம் எதிர்ப்பு
சென்னை: பொருளாதார முன்னேற்றத்துக்கான சென்னை-பெங்களூர் தொழிற்சாலை மேம்பாட்டு வழித்தடத்தில் ஆந்திராவின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தை இணைக்க தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த சென்னை-பெங்களூர் இடையே தொழிற்சாலைகள் மேம்பாட்டு வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இங்கு அமையும் தொழிற்சாலைகள் மூலம் தென்மாநிலங்களில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அந்த தொழிற்சாலைகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படும்.
இந்த திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் சென்னையில், பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர் சி.வி.சங்கர் பங்கேற்றார்.
இதுபோல், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். இத்திட்டத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தையும் இணைக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள் இருக்கும் நிலையில் ஆந்திரா துறைமுகங்களை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் ஆந்திரா அதிகாரிகளோ, தமிழக துறைமுகங்களில் ஏற்கெனவே நெருக்கடி அதிகமாக இருக்கிறது. கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தையும் இணைத்துக் கொண்டால் நெருக்கடி குறையும் என்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications