அதிமுகவுக்கே அதிக இடங்கள் கிடைக்கும்: இது டிவி சேனல்களின் கருத்து கணிப்பு 'ரவுண்ட் அப்'!
சென்னை: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை அ.தி.மு.க கைப்பற்றும் என்று தந்தி டிவியின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன 5 முனை போட்டி நிலவினாலும், அ.தி.மு.க., தி.மு.க., பாஜக இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற போவது யார் என்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. தமிழ் தொலைக்காட்சியான தந்தி டி.வி.யும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
தந்தி டிவி 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்புக்களை நடத்தியது. தொகுதிவாரியாக முன்பு கருத்துக்கணிப்பு நடத்திய தந்தி டிவி அதிமுகவிற்கு 60 முதல் 80 சதவிகிதம் ஆதரவு இருப்பதாக தெரிவித்தது.

பிரதமர் வேட்பாளர்
பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கே அதிக ஆதரவு இருப்பதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவிற்கு ஆதரவு
மாநில கட்சிகளில் அதிமுகவிற்கே அதிக ஆதரவு இருப்பதாக தொகுதிவாரியாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 40 தொகுதிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று தந்தி டிவி இறுதிக் கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அ.தி.மு.க 18 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

திமுக, பாஜகவுக்கு எத்தனை?
அதேசமயம் தி.மு.க கூட்டணி 8 இடங்களையும், பாஜக கூட்டணி 5 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. 9 தொகுதிகளை இழுபறியானவை என்றும் தெரிவித்துள்ளது.

சி.என்.என் ஐபிஎன்
அதே சமயம் சி.என்.என் ஐபிஎன் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க 15 முதல் 21 இடங்களை வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
தி.மு.க கூட்டணி 10 முதல் 16 இடங்களைக் கைப்பற்றும் என்றும், பாஜக கூட்டணி 6முதல் 10 இடங்களை வெல்லும் என்று கூறியுள்ளது.

என்.டி.டிவி என்ன சொல்லுது?
என்.டி.டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அ.தி.மு.கவுக்கு 22 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. திமுக கூட்டணி 14 இடங்களையும், பாஜக கூட்டணி 3 இடங்களையும் வெல்லும் என்றும் கூறியுள்ளது.

அதிமுகவிற்கு அதிக இடம்- இது டைம்ஸ் நவ்
மற்றொரு ஆங்கில சேனலான டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக தான் அதிகபட்சமாக 27 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. திமுகவுக்கு 6 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்
அதேசமயம், தனித்து போட்டியிடும் காங்கிரஸ் 1 இடத்தில் வெல்லும் என்றும், கம்யூனிஸ்ட்கள் 2 இடங்களில் வெல்லும் என்றும் கூறி ஆறுதல் அளித்துள்ளது டைம்ஸ் நவ் டிவி சேனல். மே 16ம் தேதி இந்த சேனல்கள் சொல்வது சரியா, தவறா என்பது தெரிந்துவிடும்..
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications