ரயில்வே பட்ஜெட்: தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்படுமா? புதிய ரயில்கள் கிடைக்குமா?
சென்னை: 2015-16 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கலாக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ.10 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை ரூ.679 கோடி நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அனைத்தும் தமிழகத்தின் புதிய ரயில் பாதை திட்டங்கள், இரு வழிப்பாதை திட்டங்கள், அகலப்பாதை திட்டங்களுக்கானதாகும்.
கடந்த 2013- 2014-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 12 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு, கடந்த காங்கிரஸ் அரசால் போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், 2014- 2015-ஆம் ஆண்டுக்கான பாஜக அரசின் பட்ஜெட்டிலும் போதிய புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. அதிலும், கடந்த 3 ஆண்டுகளில் தமிழக தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.

சென்னை – குமரி இரட்டை வழிப்பாதை
முக்கிய ரயில் திட்டமான சென்னை- கன்னியாகுமரி இரு வழிப்பாதைத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
அதேபோல, சென்னை- நாகர்கோவில் வரையிலான வழித்தடத்தில் இரு வழிப்பாதை திட்டம், செங்கல்பட்டு- திண்டுக்கல் இரு வழிப்பாதை திட்டம் முடங்கி உள்ளன. இவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து வராமல் இழுபறியாகவே ஆண்டுகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

புதிய திட்டங்கள் இல்லை
மேலும், இப்போதுள்ள ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இருக்காது என்று தெரிவித்திருப்பது தமிழக ரயில் பயணிகளை கலக்கமடைய வைத்துள்ளது.

ராயபுரம் ரயில் முனையம்
ராயபுரம் ரயில் முனையம்: 2012- 2013-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-ஆவது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு இல்லை
ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.மேலும், 2013-2014-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்கான எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால், சிறப்பு திட்டத்தின் கீழ் ராயபுரம் ரயில் முனையமாக்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நடைமேடைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

24 திட்டங்கள் கிடப்பில்
ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வே துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த 7 குழுக்களை அமைத்தார். குழுக்களின் பரிந்துரைப்படி, நாடு முழுவதும் அனுமதி அளிக்கப்பட்ட சுமார் 160 திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. அதில், தமிழகத்துக்கான 24 திட்டங்களும் அடங்கும்.

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்
1. சென்னை- ஸ்ரீபெரும்புதூர் (வழி பூந்தமல்லி), 2. ஆவடி- ஸ்ரீபெரும்புதூர், 3. ராமேசுவரம்- தனுஷ்கோடி, 4. தஞ்சாவூர்- அரியலூர்- சென்னை எழும்பூர், 5. திண்டிவனம்- கடலூர் (வழி புதுச்சேரி) 6. மயிலாடுதுறை- திருக்கடையூர்- திருநள்ளாறு- காரைக்கால், 7. ஜோலார்பேட்டை- ஒசூர் (வழி கிருஷ்ணகிரி), 8. சத்தியமங்கலம்- மேட்டூர், 9. ஈரோடு- சத்தியமங்கலம், 10. சத்தியமங்கலம்- பெங்களூரு, 11. மொரப்பூர்- தருமபுரி (வழி முக்கனூர்), 12. மதுரை- காரைக்குடி (வழி திருப்பத்தூர்), 13. வில்லிவாக்கம்- காட்பாடி ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

இதுவும் கிடையாது
அதேபோல திருவண்ணாமலை- ஜோலார்பேட்டை, மதுரை- கோட்டயம், அரக்கோணம்- திண்டிவனம் (வழி வாலாஜாபேட்டை), சிதம்பரம்- ஆத்தூர் (வழி அரியலூர்), திண்டுக்கல்- கூடலூர், திண்டுக்கல்- குமுளி, காட்பாடி- சென்னை (வழி பூந்தமல்லி), கும்பகோணம்- நாமக்கல், மானாமதுரை- தூத்துக்குடி, நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி மன்னார்குடி), தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கும் மங்கலம் பாடப்பட்டு விட்டது.

பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள்
1. சென்னை- கடலூர், 2. பழனி- ஈரோடு, 3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை, 4. திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது), 5. ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி, 6. மதுரை- போடி, 7. திண்டுக்கல்- கோவை ஆகியவை பாதியிலேயே நிறுத்தப்பட்ட ரயில்பாதை திட்டங்களாகும். இவை தவிர திருச்சி- தஞ்சாவூர், இருகூர்- போத்தனூர் இருவழிப்பாதை திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஈரோடு – தாராபுரம் - பழனி
ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரை போடப்பட்ட ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரை புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ் அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற 2011-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கியது. 2011-இல் ரூ.33 கோடியும், 2012-இல் ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டு கோரிக்கை கிடப்பில்
இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட பிறகும் சர்வே பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ஒதுக்கப்பட்ட பணம் என்னவானது என்ற கேள்வி எழுந்த போது, ரயில்வே துறை திடீரென திட்டத்தை நிறுத்தி வைத்தது. காலப்போக்கில் அதைகிடப்பில் போட்டுவிட்டது. இதனால் இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கனவு கேள்விக்குறியாகவே உள்ளது.

எதிர்மறை முடிவுகள்
இதுகுறித்து முன்னாள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா கூறியபோது, ஈரோடு- பழனி ரயில் திட்டம் குறித்து ஆய்வுப் பணிகள் நடந்ததில் எதிர்மறை முடிவுகள்தான் கிடைத்துள்ளன. ஈரோடு- பழனி இடையே லாபம் கிடைக்கும் அளவுக்கு பயணிகளின் போக்குவரத்து இல்லை. எனவே, ஈரோடு-பழனி ரயில் திட்டம் சாத்தியமில்லை. இத்திட்டத்தை ரயில்வே வாரியம் நிறுத்தி வைத்துள்ளது என்றார்.

வர்த்தகம் பெருகும்
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தாராபுரம், காங்கேயம் பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறிகள், அரசி, நெல், எண்ணெய் போன்றவற்றிற்கும், சென்னிமலையிலிருந்து ஈங்கூர் வரையில் உள்ள பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி துணிகள் உள்ளிட்ட ஜவுளிகள் போன்றவற்றின் விற்பனைக்கும், ஈரோட்டிலிருந்து பழனிக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications