மகா கேவலம்... ஆந்திர வெறியாட்டத்தை உடனடியாக கண்டிக்கத் தவறிய தமிழக திராவிடக் கட்சிகள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர போலீஸார் நடத்திய கொலை வெறித் தாக்குதலை உடனடியாக கண்டிக்கத் தவறியுள்ளன தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்சிகள். இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சம்பவம் நடந்து இத்தனை நேரமாகியும் இதுவரை திமுகவிடமிருந்தோ, அதிமுகவிடமிருந்தோ, தேமுதிகவிடமிருந்தோ இன்னும் பிற கட்சிகளிடமிருந்தோ ஒரு கண்டனம் கூட வரவில்லை. பாஜக மட்டும் கருத்துக் கூறியுள்ளது.

TN parties failed to condemn AP police

செம்மரம் வெட்டிக் கடத்தும் கும்பலால் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமே இல்லாமல் மிகக் கொடூரமாக குருவி சுடுவது போல சுட்டுத் தள்ளியுள்ளது ஆந்திர போலீஸ். 20 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எதுவும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளன. தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டிவிகளிலும் சன் டிவி மட்டுமே ஆரம்பத்திலிருந்தே இந்த செய்தியை காட்டி வந்தது. பிற டிவிகளில் ஒரு சின்ன பிளாஷ் கூட போடவில்லை. நீண்ட நேரம் கழித்தே போட ஆரம்பித்தனர்.

முக்கிய கட்சிகள் இப்படி இத்தனை தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வாய் மூடி மெளனம் காப்பது பெரும் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

வாய் கிழிய பேசும் தலைவர்கள் கூட கப்சிப் என்று இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமையானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+