தேர்தல் திண்ணை... இவங்கெல்லாம் "இதை" வச்சுத்தான் கூடிக் கூடிப் பேசுறாங்க!
சென்னை: சட்டசபைத் தேர்தலாகட்டும், நாடாளுமன்றத் தேர்தலாகட்டும், ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்துத்தான் கூட்டணி பேசும், சீட் கேட்கும். அந்த வகையில் கடந்த தேர்தலில் ஒவ்வொரு முக்கியக் கட்சியும் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் சுவாரஸ்யமான பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. படு புத்திசாலித்தனமாக செயல்பட்டு தேமுதிகவை வளைத்துப் போட்டு திமுகவை வீழ்த்தியது அதிமுக.
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முடியாமல் போனதால், திமுக இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. இதற்கெல்லாம் காரணம் தேமுதிகவிடமிருந்த வாக்கு சதவீதம்தான்.
கடந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதத்தைப் பார்க்கலாம்...

அதிமுக
கடந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் அதிமுகவுக்குக் கிடைத்தது 1 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 289 வாக்குகள் ஆகும். அதாவது 38.40 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றது.

திமுக
2வது இடத்தைப் பெற்ற திமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 82 லட்சத்து 49 ஆயிரத்து 991 வாக்குகள் ஆகும். வாக்கு சதவீதம் 22.39 சதவீதம் ஆகும்.

காங்கிரஸ்
63 இடங்களை திமுகவிடமிருந்து அடித்துப் பறித்துப் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 34 லட்சத்து 64 ஆயிரத்து 432 வாக்குகள். கிடைத்த வாக்கு சதவீதம் 9.30 சதவீதம்.

தேமுதிக
விஜயகாந்த்தின் தேமுதிகவுக்கு கடந்த தேர்தலில் செம லாபம் கிடைத்தது. அதுவரை வாக்குகளைப் பிரித்து மட்டுமே வந்த அக்கட்சிக்கு கை கொள்ளாத அளவுக்கு சீட் கிடைத்தது அதிமுக புண்ணியத்தால். தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 29 லட்சத்து 3 ஆயிரத்து 828 ஆகும்.வாக்கு சதவீதம் 7.88 சதவீதம்.

பாமக
30 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வென்ற பாமகவுக்கு கிடைத்த வாக்குகள் 19 லட்சத்து 27 ஆயிரத்து 783 வாக்குகள். வாக்கு சதவீதம் 5.23 சதவீதமாகும்.

பாஜக
204 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜகவுக்கு 8 லட்சத்து 19 ஆயிரத்து 577 வாக்குகள் கிடைத்தன. வாக்கு சதவீதம் ஜஸ்ட் 2.22 சதவீதம்தான்.

சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட்டு 10 இடங்களில் வென்றது. மொத்த வாக்குகள் 8 லட்சத்து 88 ஆயிரத்து 364 ஆகும். வாக்கு சதவீதம் 2.41 சதவீதம்.

சிபிஐ
10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. இதற்குக் கிடைத்த வாக்குகள்7 லட்சத்து 27 ஆயிரத்து 394 ஆகும். வாக்கு சதவீதம் 1.97 சதவீதம்.

விடுதலைச் சிறுத்தைகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு எதிலும் வெல்லவில்லை. அதன் வாக்கு சவீதம் 1.51 ஆகும். கிடைத்த வாக்குகள் 5 லட்சத்து 55 ஆயிரத்து 965 வாக்குகள்.

மனித நேய மக்கள் கட்சி
அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற மனிதநேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் வென்றது. இக்கட்சிக்குக் கிடைத்து வாக்குகள் 1 லட்சத்து 81 ஆயிரத்து 180 ஆகும். இதன் வாக்கு சதவீதம் 0.49 சதவீதம்.

புதிய தமிழகம்
புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 2 இடங்களில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றது. பெற்ற வாக்குகள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 454 ஆகும். வாக்கு சதவீதம் 0.40.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications