வெட்கம்கெட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை எங்கு பார்த்தாலும் விடாதீங்க.. கட்ஜு அதிரடி
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சி மூலம் நாட்டையை ஆச்சரியப்பட வைத்த தமிழர்களே, இந்த போராட்டத்தையும் இப்போது செய்யுங்கள். உங்களது தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு எதிராக அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டுங்கள். எங்கு பார்த்தாலும் போராட்டம் நடத்துங்கள் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள முகநூல் பதிவு:
தமிழர்களே, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்மூலமாக ஒட்டுமொத்த நாட்டையும் வியக்க வைத்து விட்டீர்கள். நீங்கள் ஹீரோக்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது தமிழ்நாடும், ஒட்டுமொத்த தேசமும், இன்னொரு ஹீரோயிசத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றன.

பெங்களூர் சிறையிலிருந்துபடி ஆட்சியைக் கட்டுப்படுத்தும் குற்றவாளி, சிறைப் பறைவையின் பொம்மை ஆட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் வெட்கம் கெட்ட எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நீங்கள் சட்டபூர்வமாக, அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
அவர்களது வீடுகள், அலுவலகங்களுக்கு வெளியே நின்று போராடுங்கள், எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இந்த எம்.எல்.ஏக்கள் எங்கு போனாலும் விடாதீர்கள். அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுங்கள். அவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடாதீர்கள். சமூக ரீதியாக அவர்களைப் புறக்கணியுங்கள். எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக செய்யுங்கள்.
தமிழ் மக்களின் வீரத்தை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் மாபெரும் மன்னர் ராஜராஜ சோழனின் வழி வந்தவர்கள் என்பதை இந்த எம்.எல்.ஏக்கள் உணரும்படி செய்ய வேண்டும் என்று கட்ஜு கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications