கமல், ரஜினி இருவருக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியை பரிசளிக்கும்: இயக்குநர் கவுதமன்
கமல், ரஜினி இருவருக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியை பரிசளிக்கும் என்று கவுதமன் விமர்சித்துள்ளார்.
கதிராமங்கலம் : அரசியலுக்கு வந்திருக்கும் கமலுக்கும், விரைவில் வரவிருக்கும் ரஜினிக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியைப் பரிசளிக்கக் காத்திருக்கிறது என்று திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப்போராட்டம் 278வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

அவர்களை திரைப்பட இயக்குநர் கவுதமன் இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அரசியல் சூழல் என்ன என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்து இருக்கிறார்கள். இனியும் திரைப்பட நடிகர்களை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், கமல், ரஜினி இருவரும் மீனவர் பிரச்னை, விவசாய பிரச்னை, தமிழர் பிரச்னை என எதற்கும் இத்தனை ஆண்டுகள் குரல் கொடுக்காமல் இருந்துவிட்டு தற்போது அரசியல் ஆதாயத்திற்காக பேசுவது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்னொரு முறை நடிகர்களை கோட்டையில் அமரவைத்து ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. அரசியலுக்கு வந்த கமலுக்கும், வரவிருக்கும் ரஜினிக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியையே பரிசளிக்கும். இவர்கள் இருவரும் மோடி அரசின் ஆதரவாளர்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications