மாயமான வேந்தர் மூவிஸ் மதனை பிடிக்க நாளையோடு கெடு முடிகிறது... போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
சென்னை: மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி கோடிக் கணக்கில் வசூல் செய்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் மதனை பிடிக்க செப். 21ந் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்திருந்தது. நாளையோடு கெடு முடிவடைய உள்ள நிலையில் போலீசார் மதனைத் தேடும் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக வேந்தர் மூவிஸ் மதன் சுமார் 80 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட 109 மாணவர்களும் பணத்தை மீட்டுத்தரக் கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும், 109 பேரில் 14 பேர் பணத்தை மீட்க உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

இதனிடையே மதனின் தாயாரும் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஏன் இன்னும் மதனை கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், செப்டம்பர் 21ந் தேதிக்குள் மதனை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, உயர்நீதிமன்றம் போலீசாருக்கு அளித்த கெடு நாளையோடு முடிவடைகிறது. இதனால் மதனை தேடும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதனின் உறவினர்கள், நண்பர்கள் என மதனுடன் மிக நெருக்கமாக இருந்த அனைவரிடமும் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மதனை பிடிக்க 2 காவல்துறை உதவி ஆய்வாளர்கள், 7 ஆய்வாளர்கள் கொண்ட குழு தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றத.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications