தவெக + திமுக Vs பாஜக.. அமித் ஷா கையில் எடுத்த ‘பக்கா மாஸ்டர் பிளான்’.. களமிறக்கப்படும் அண்ணாமலை!
சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. இந்தச் சூழலில், பின்னணியில் இயங்கி வரும் ஒரு முக்கிய அரசியல் சதுரங்க வேட்டை இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. அதுதான், "திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) ஒன்றுதான்" என்று பொதுவெளியில் கட்டமைக்கப்படும் ஒரு புதிய பிம்பம்.
உண்மையில், இது ஒரு பக்கா பாஜக நரேட்டிவ் (BJP Narrative) என்கிறார்கள் விவரம் அறிந்த டெல்லி தலைகள். தவெக, திமுக ஆகிய இரண்டு எதிர் எதிர் துருவங்களையும் ஒரே தராசில் வைத்து, இரண்டுமே ஒன்றுதான் என்கிற தோற்றத்தை உருவாக்கி, மறுபக்கத்தில் தன்னை மட்டுமே மாற்று சக்தியாக 'பொசிஷன்' (Position) செய்ய பாஜக மிகத் தீவிரமாக முயன்று வருகிறது.

தேர்தல் முடிவுகள் காட்டும் எதார்த்தம்: விஜய்யின் வாக்கு வங்கி யாருடையது?
சமீபத்திய தேர்தல் முடிவுகளை நாம் சற்று ஆழமாக உற்று நோக்கினால் ஒரு உண்மை தெளிவாகப் புரியும். புதிதாகக் களம் கண்ட தவெக தலைவர் விஜய், மிக முக்கியமாக தலித் மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண் வாக்காளர்களின் வாக்குகளைப் பெருமளவில் பெற்றுள்ளார். அரசியல் தளத்தில் இந்த மூன்று வாக்கு வங்கிகளுமே பாரம்பரியமாக பாஜகவின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான, மதச்சார்பற்ற கொள்கை கொண்ட வாக்கு வங்கிகளாகும். திமுகவின் பாரம்பரிய வாக்குகள்.
அப்படியிருக்க, இந்த வாக்குகள் எப்படி பாஜகவுக்குச் சாதகமானதாக மாறும்? இங்குதான் பாஜக தனது அடுத்தகட்ட மத அரசியல் வியூகத்தை வகுக்கிறது.
பாஜகவின் பிரசார உத்தி:
தவெக தலைவர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதும், அவரைச் சுற்றிலும் பல கிறிஸ்தவப் பிரமுகர்களை அவர் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார் என்பதும்தான் தற்போது கிளப்பப்படும் புதிய விவாதம். இதையே ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் இருக்கும் 'இந்து மெஜாரிட்டி' (Hindu Majority) வாக்குகளைத் தங்களுக்கு ஆதரவாக ஒன்று திரட்ட பாஜக திட்டமிடுகிறது. அதாவது தவெக - திமுக ஒன்று என்று கூறி திமுகவை பலமிழக்க செய்வது.. திமுகவை கேமில் இருந்தே அகற்றுவது.. இன்னொரு பக்கம் பாஜகவை எதிர் பக்கத்தில் நிறுத்தி அதிமுகவை வலிமை இழக்க செய்து.. பாஜகவை எதிர் டீம் போல மாற்றுவது.
அதற்கு ஓர் அரசியல் உள்ளடக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, "தவெக + திமுக Vs பாஜக" என்ற ஒரு இருமுனைப் போட்டிப் பிரசாரத்தை அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.
அண்ணாமலையின் வருகையும், எடப்பாடியின் வீழ்ச்சியும்:
இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த, ஒருவேளை கே. அண்ணாமலை போன்ற ஆக்ரோஷமான அரசியல் தலைவர்களை மீண்டும் தமிழக பாஜகவின் முன்னிலை முகமாகக் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன.
மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சரிவைச் சந்தித்து, அவரது தலைமை வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அக்கட்சியின் பின்னணியில் இருக்கும் வலுவான 'கவுண்டர் லாபி' (Gounder Lobby) இந்த புதிய அரசியல் மாற்றத்தை ஆதரிக்கத் தொடங்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
தமிழகத்தில் பாஜகவின் இறுதி இலக்கு
அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அந்த இடத்தை நோக்கி நகர நினைக்கும் பாஜகவுக்கு இந்தத் தேர்தல் களம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. தவெக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் நிறுத்துவதன் மூலம், "இந்துக்களுக்கு எதிரான கூட்டணி ஒருபுறம், அவர்களுக்கு ஆதரவான பாஜக மறுபுறம்" என்கிற பிம்பத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள்.
மொத்தத்தில், தமிழ்நாட்டில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சாதகமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி, திராவிட மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான சித்தாந்தத் தரப்பாக மாறுவதற்கு பாஜக தன் முழு பலத்தையும் பிரயோகிக்கப் பார்க்கிறது. இந்த 'நரேட்டிவ்' அரசியலைத் தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
உள்துறை பொறுப்பை வேறு அமைச்சருக்கு ஒப்படைக்க முதல்வர் விஜய் திட்டம்? தமிழக அரசியலில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications