அதிமுக 102, திமுக 79, பாமக 1, இழுபறி 52: தேர்தலுக்கு முந்தைய தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 102 இடங்களிலும், திமுக 79 இடங்களிலும்,பாமக 1 இடத்திலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவியின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 52 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் தந்தி டிவி கணித்துள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது. பல மாவட்டங்களில் மழை பெய்தாலும் குடையோடு வந்து மழையில் நனைந்து கொண்டே வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து மக்கள் ஜனநாயகக் கடமையாற்றினர்.

சட்டசபை தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று 'மக்கள் யார் பக்கம்' என்ற ஒரு கருத்து கணிப்பை தந்தி டிவி கடந்த இரு மாதகாலமாக வெளியிட்டு வந்தது. தேர்தலுக்கு முந்தைய இந்த கருத்துக்கணிப்பின் இறுதி முடிவுகள் இன்று வெளியாகின.
இந்த கருத்துக்கணிப்பில் யாருக்கு எத்தனை இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தந்தி டிவி அறிவித்துள்ள முடிவுகள்
அதிமுக - 102 தொகுதிகள்
திமுக கூட்டணி - 79 ( திமுக 69 + காங்கிரஸ் 10 )
பாமக - 1 பென்னாகரம்
இழுபறி - 52
இன்றைய தினம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்ட தந்தி டிவி செவ்வாய்கிழமையன்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட உள்ளது. எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே வந்துள்ளது. டைம்ஸ் நவ் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவு மட்டும் அதிமுகவிற்கு சாதகமாக வெளியாகியுள்ளது. தந்தி டிவியின் எக்ஸிட் போல் முடிவு என்ன சொல்கிறது என்பதை மே 17ம் தேதி பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications